ஒரு லாரிக்கு ரெண்டு டீசல் டேங்க்! கடத்தலில் கலக்கும் டிரைவர்கள்!

 

ஒரு லாரிக்கு ரெண்டு டீசல் டேங்க்! கடத்தலில் கலக்கும் டிரைவர்கள்!

கடத்தல் பொருட்களுக்கு பெரும்பாலும் லாரி டிரைவர்களையே பெரும்புள்ளிகள் பயன்படுத்துகிறார்கள். விதவிதமான ட்ரிக்குகளால் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி அநாவசியமாக கடத்தி சென்று விடுகிறார்கள்.

கடத்தல் பொருட்களுக்கு பெரும்பாலும் லாரி டிரைவர்களையே பெரும்புள்ளிகள் பயன்படுத்துகிறார்கள். விதவிதமான ட்ரிக்குகளால் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி அநாவசியமாக கடத்தி சென்று விடுகிறார்கள். இந்நிலையில், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நரசிப்பட்டினத்தில் நேற்று கலால் வரித்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

lorry

அப்போது வேகமாக அந்த பகுதிக்கு வந்துக் கொண்டிருந்த ஒரு லாரியை மடக்கிச் சோதனை செய்தனர். 
கலால் துறையினரின் சோதனையில் சந்தேகப்படும் படியான எந்த பொருளும் லாரியில் கிடைக்கவில்லை. டிரைவர் சீட் பகுதிகளில் எல்லாம் சோதனைகளை முடித்து விட்டு, லாரியில் எந்த பொருளும் இல்லை என்று தீர்மானத்திற்கு வந்து விட்டனர் கலால் துறையினர். லாரியை போக அனுமதிக்கலாம் என்று முடிவெடுத்த நேரத்தில், கலால் துறையில் இருந்த ஒரு அதிகாரிக்கு பொறி தட்டியிருக்கிறது. சாதாரணமாக எல்லா லாரிகளிலும் அடிப்புறத்தில் ஒருபக்கம் டீசல் டேங்க் இருக்கும்.

drug

ஆனால் இந்த குறிப்பிட்ட லாரியில் மட்டும் இரு பக்கமும் டீசல் டேங்க் போல் பெரிய பெட்டிகள் இருப்பதை கண்டார். அதன் ஒரு பெட்டி நிஜமான டீசல் டேங்காகவே இருந்த நிலையில், இன்னொரு பக்கம் இருந்த டீசல் டேங்குக்குள் டீசலுக்கு பதிலாக 150 கிலோ கஞ்சா மூட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.