ஒரு ‘ரேர்’ அதிகாரியின் ரெகுலர் அட்ராசிட்டிஸ்!

 

ஒரு ‘ரேர்’ அதிகாரியின் ரெகுலர் அட்ராசிட்டிஸ்!

மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான ஒரு விடுதி இருக்கிறது. அங்கிருக்கும் தனியார் விடுதிகளோடு ஒப்பிட்டால் அது அமைவிடம், அறை வாடகை,உணவகம்,பார் எல்லாமே மிகவும் குறைந்த செலவில் சிறப்பாக இருக்கும் என்பதால், அது எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்.

மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான ஒரு விடுதி இருக்கிறது. அங்கிருக்கும் தனியார் விடுதிகளோடு ஒப்பிட்டால் அது அமைவிடம், அறை வாடகை,உணவகம்,பார் எல்லாமே மிகவும் குறைந்த செலவில் சிறப்பாக இருக்கும் என்பதால், அது எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ‘ ரேர் ‘ அதிகாரியை அந்தத் துறையின் இயக்குநராகப் நியமித்தார்கள். அவருக்கு அது கொஞ்சம் பதவி இறக்கம் போலதான் என்பதால் அவரால் அந்தப் பணியில் ஈடுபட இயலவில்லை. அதனால், இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்குத் தயாராக இருந்த காஃபி ஷாப், மற்றும் ரெஸ்டாரெண்டுக்கு திறப்பு விழாகூட நடத்தவில்லை நமது மிஸ்ட்டர் ‘ரேர்’ ஆபீஸர். ஆனால், அந்த உணவகத்தில் வேலைபார்த்த சைனீஸ் செஃப் ஒருவர், இரண்டு செக்யூரிட்டிகள், இரண்டு அலுவலக உதவியாளர்களை தனது வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார். அன்று முதல் அவர்கள் மிஸ்டர் ரேரின் வீட்டில் சமையல் முதல், வீட்டு பாதுகாப்பு மற்றும் இதர வேலைகளைச் செய்து வந்தார்கள். சமீபத்தில் மிஸ்டர் ரேர் சுற்றுலாத்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டு விட்டார். ஆனால் மாமல்லபுரம் சுற்றுலாவிடுதி ஊழியர்கள் இப்போதும் அவரது வீட்டில்தான் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களது ஊதியம் மட்டும் சுற்றுலாத்துறை உணவகத்தின் கணக்கில் இருந்துதான் போகிறது.அந்த ஊழியர்களும் பாவம், மிஸ்டர் ரேரிடம் இருந்து தங்களுக்கு விடுதலை ‘ வருமா..வருமா’ என்று ஆவலாக காத்திருக்கிறார்கள் அடிமை வேலை செய்தபடியே.