ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டியிடம் வீடியோ கால் மூலம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

 

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டியிடம் வீடியோ கால் மூலம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியைத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

கோவை: கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியைத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

கோவை மாவட்டம் வடிவேலாம்பாளையம் பகுதியில் 85 வயதுடைய கமலாத்தாள் பாட்டி என்பவர் வசித்து வருகிறார். பல காரணங்களைக் கட்டி உணவகங்கள் இன்றைய காலகட்டத்தில் உணவுப் பொருள்களின் விலையை சரமாரியாக ஏற்றிக் கொண்டிருக்கையில் கமலாத்தாள் பாட்டி வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். மேலும் தன்னுடைய காலம் முடியும்வரை ஒரு ரூபாய்க்கு மட்டுமே, தான் இட்லி விற்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஊரடங்கால் நாடே முடங்கிப் போயிருக்கும் இந்த நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் சுமார் 400 பேருக்கு மேல் உணவளித்து கமலாத்தாள் பாட்டி சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ttn

ஆனால் ஊரடங்கு உத்தரவால் பல மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து விட்டதால் கமலாத்தாள் பாட்டி சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். இருப்பினும் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கமலாத்தாள் பாட்டியுடன் வீடியோ கால் மூலம் பேசி அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் எந்த உதவி வேண்டுமென்றாலும் எப்போதும் தன்னிடம் சொல்லலாம் எனவும், உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுமாறும் பாட்டியிடம் ஸ்டாலின் கூறினார்.