ஒரு மாத ஊதியத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கொடுத்த பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்!

 

ஒரு மாத ஊதியத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கொடுத்த பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்!

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 930  கடந்த நிலையில், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தாராளமாக நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி பொதுமக்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து விளையாட்டு வீரர்களும், ஐஏஏஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவர்களாலான நிதியுதவியை அளித்துவருகின்றனர். 

Jp nadda

இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத ஊதியத்தை மத்திய நிவாரண நிதிக்கு வழங்குவர் என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.