ஒரு மாதம் கழித்து நித்திக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்ட குஜராத் போலீஸ்

 

ஒரு மாதம் கழித்து நித்திக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்ட குஜராத் போலீஸ்

நித்தியானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீஸ் உதவியை நாடும் வகையில் ப்ளூ கார்னர் நோட்டீஸை குஜராத் போலீஸ் பிறப்பித்துள்ளது.
சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பதே போலீசுக்கு தெரியவில்லை.

நித்தியானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீஸ் உதவியை நாடும் வகையில் ப்ளூ கார்னர் நோட்டீஸை குஜராத் போலீஸ் பிறப்பித்துள்ளது.
சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பதே போலீசுக்கு தெரியவில்லை. நித்தியானந்தாவோ தனியாக கைலாசா என்ற நாட்டை தொடங்கிவிட்டதாக போக்குகாட்டி வருகிறார். இந்தநிலையில் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று சர்வதேச போலீஸ் உதவியை பெறும் வகையில் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீசை குஜராத் போலீசார் பிறப்பித்துள்ளனர்.

nithi-in-kailasa

கடந்த டிசம்பர் மாதமே நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழிந்த நிலையில் இப்போதுதான் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதன் மூலம் கிரிமினல் வழக்கில் தேடப்படும் நபர் என்ற அளவில், நித்தியானந்தா எந்த நாட்டில் உள்ளாரோ அந்த நாட்டு போலீஸ் இந்தியாவுக்கு அவரது இருப்பிடம் பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்.
ரெட் நோட்டீஸ் பிறப்பித்தால் மட்டுமே, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது அல்லது சர்வதேச நடுவர் மன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்துவது ஆகிய செயலை வெளிநாட்டு போலீசார் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த நாட்டிலும் அடைக்கலம் புக முடியாத நிலையில் கப்பல் ஒன்றை வாங்கி அதற்கு கைலாசா என்று பெயர் சூட்டி, தண்ணீரிலேயே நித்தி மிதந்து வருகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், ப்ளூ கார்னர் நோட்டீசால் அவரைக் கண்டறிவது கடினம் என்று நித்தியின் பக்தர்கள் கூறுகின்றனர்.