ஒரு மாசத்துல ரூ.19 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி! என்ன சொன்னாலும் புரிய மாட்டுங்குதே… புலம்பும் மத்திய அரசு

 

ஒரு மாசத்துல ரூ.19 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி! என்ன சொன்னாலும் புரிய மாட்டுங்குதே… புலம்பும் மத்திய அரசு

இந்தியா கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் ரூ.19 ஆயிரம் கோடிக்கு தங்கத்தை இறக்குமதியாகி உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் சுமார் 13 சதவீதம் அதிகமாகும்.

சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் சீனாவுக்கு அடுத்து நம்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தங்கத்தை வெறும் ஆபரணமாக பார்க்காமல் அதனை ஒரு முதலீடாகவும், நிதி நெருக்கடியான சமயங்களின் உதவும் உற்ற தோழனாகவும் நம்மவர்கள் கருதுவதால் அதனை வாங்கி குவிக்கின்றனர். நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவுக்குதான் உள்ளது. அதனால் இறக்குமதி செய்துதான் உள்நாட்டு தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

தங்கம்

தங்கம் இறக்குமதியால் மத்திய அரசுக்கு எந்தவித பலனும் இல்லை. மேலும், அன்னிய செலாவணி கையிருப்புதான் வெளியே அதிகம் செல்கிறது. இதற்கு முடிவு கட்டு தங்க பத்திர திட்டம் மற்றும் தங்க டெபாசிட் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தங்க பத்திரத்தில் மக்கள் தற்போது முதலீடு செய்து வந்தாலும், ஆபரணமாக வாங்குவதில்தான் அவர்கள் உள்ளனர்.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியபோதும், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியா ரூ.19 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 2018 ஜூன் மாதத்தை காட்டிலும் சுமார் 13 சதவீதம் அதிகமாகும். தங்கம் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் வேளையில் இறக்குமதி அதிகரித்துள்ளதால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது.

தங்க கட்டிகள்

2019 மே மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி சுமார் 40 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதத்தில் சுமார் ரூ.33 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதியானது.