ஒரு மண்டலத்திற்குள் உடலினை மெழுகு போல் மிளிர வைக்கும் சித்த ஜாலம்  

 

ஒரு மண்டலத்திற்குள் உடலினை மெழுகு போல் மிளிர வைக்கும் சித்த ஜாலம்  

சித்தர்களின் அற்புதமான மருத்துவ முறைகளையும் அதனால் ஏற்படும் பல்வேறு விதமான நன்மைகளை பற்றி பார்போம்.

சித்த மருத்துவம் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவம். இதை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த வைத்தியம் என்று பலர் பல பெயர்களில் அழைப்பதுண்டு. 

siddtharkal

சித்தர்களின் மருத்துவ குறிப்பு படி அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பான மருந்து உள்ளது. அவற்றை உண்பதால் உடலுக்கு எந்த வித தீங்கும் நேராது என்பது ஆதாரமான உண்மை.

வச்சிர காயம் என்பது  இந்திரனின் கையில் இருக்கும் வச்சிராயுதம் போன்ற உறுதி படைத்த தேகம் பெருவதற்கான ஜாலம். இதை ஒரு காய கற்ப முறை என்றும் சொல்லலாம். இந்த காய கற்பக முறையினை பயன்படுத்தி உடலினை மிகவும் வலிமையானதாக மாற்ற முடியும் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர். 

உடலினை வலுபெற சித்தர் அருளிய பாடல்: 

பலமான கற்பமிது மண்டலந்தானையா
பொச்சாலி யரிசி பச்சைப்பயறு மொன்றாய் சேர்த்து
வாமென்று பொங்கி தேக்கிலையில் கொட்டி
வாவின்பசும் பால்படிதா னுண்பீராகில்
போமென்றும் புளியாரை முப்பூவினுப்பும்
பேராக வதைக்கடைந்து உண்ணலா மைந்தா
நாமென்று மலைமிளகு காரமதுவாகும்
நண்பான பச்சைப் பயறு குழம்பதுவுமாமே

அமென்று இம்முறையில் மண்டலம் கொள்வீர்
யன்பான பித்தநீர் கும்பஸ்தனம் போல
வேமேதான் சலமேல்லாம் விழுந்தங்கே போகும்
விடுபட்டால் பித்தநீர் விந்து கல்லாகும்
நாமேதான் இந்தப்படி ஞாயமதாய் சொன்னோம்
நரைதிரையும் மற்றுப்போ மண்டலத்துக் குள்ளே
ஏமேதா மெழுகு வச்சிரக் காயமாகு
மியம்பினதோர் வச்சிரகாய சாலமாச்சே

siddthargal

நிலையான காயமதில் நோய்வருகாதையா
நிராமயத்தை தினந்தோறும் நின்றுகளிகூர்வாய்
அலையாதே யொருமனதாய் மண்டலங் கொள்வீரால்
ஆயுசுக்கு தினந்தோறும் பயமில்லை வயதுபதினாறாம்
குலையாதே நாய்போல வாழ்வைச் சேதமாக்கா
கூடுவா றோடே கூடாதே குறிப்பாக நில்லு
துலையாதே பெண்மாய்கை விட்டபோதையா
சொன்னதெல்லாம் மாடுமடா துதி பெறுவாய் நீயே

பொச்சாலி அரிசியையும், பச்சைபயறும் ஒன்றாக சேர்த்துப் பொங்கி அந்த சோற்றை, தேக்கு மரத்தின் இலையில் கொட்டி அதனுடன் ஒரு படி பசும் பாலை சேர்த்து உண்ண வேண்டுமாம்.

அப்படி உண்ணும் போது புளியாகீரை, முப்பூவின் உப்பு, காரத்திற்க்கு மலைமிளகு ஆகியவை சேர்த்து கடைந்து உண்ணலாமாம், பச்சைப் பயற்றை குழம்பிற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டுமாம். இவை தவிர உணவில் வேறு எதனையும் சேர்க்கக் கூடாது என்கிறார் சித்தர் பெருமான்.

siddargal

மனதை தளரவிடாமல் ஒரு மனதாய் இந்த முறையில் ஒரு மண்டலம் தொடர்ந்து உண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற நீரெல்லாம் வெளியேறி, பித்தநீர், விந்து எல்லாம் கல்லாகுமாம், அத்துடன் இந்த ஒரு மண்டலத்திற்குள் நரைதிரை யாவும் நீங்கி, உடல் மெழுகு போல் பளிச்சென வச்சிரமாகும் என்கிறார் சித்தர்.

இப்படி ஒரு மண்டலம் தொடர்ந்து உண்பவரின் உடல் அழியாது நிலைத்துவிடும் என்றும், அப்படி நிலைத்த உடலில் நோய் அணுகாது என்றும் கூறுகிறார்.மேலும் ஆயுளுக்கு பயமில்லாமல் இருப்பதுடன் என்றும் பதினாறு வயது போல் இருக்கலாம் என்கிறார்.