ஒரு மணி நேரம் ரயில் லேட்டா வந்தால், பயணிகளுக்கு ரூ.100 வழங்கப்படும்! அடி தூள்!! 

 

ஒரு மணி நேரம் ரயில் லேட்டா வந்தால், பயணிகளுக்கு ரூ.100 வழங்கப்படும்! அடி தூள்!! 

விமானத்தில் உள்ளது போன்ற வசதிகள் கொண்ட முதல் தனியார் ரயில் உத்திரபிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

விமானத்தில் உள்ளது போன்ற வசதிகள் கொண்ட முதல் தனியார் ரயில் உத்திரபிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தேஜாஸ் என்ற தனியார் நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் புதிய தனியார் ரயில் போக்குவரத்துக்குச் சேவையை ஐஆர்சிடிசியுடன் இணைந்து இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டெல்லி மற்றும் லக்னோ இடையே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரயிலில் பணிப்பெண்கள், குளிர்சாதன வசதி, ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா, காபி மெஷின் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என்றும் செவ்வாய் கிழமை மட்டும் ரயிலுக்கு ஓய்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேஜஸ்

இந்நிலையில் இந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால் 100 ரூபாயும், 2 மணி நேரம் தாமதமாக வந்தால் 250 ரூபாயும் தேஜஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ரயிலில் பயணிக்கு ஒவ்வொரு பயணிகளுக்கும் ரூ. 25 லட்சம் வரை காப்புறுதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.