ஒரு ப்ரிவ்யூ ஷோ போடறதைக் கூடவா கூட்டணி கட்சி தீர்மானிக்கும் ! இயக்குநரின் புலம்பல்!?

 

ஒரு ப்ரிவ்யூ ஷோ போடறதைக் கூடவா கூட்டணி கட்சி தீர்மானிக்கும் ! இயக்குநரின் புலம்பல்!?

‘கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்கு  பிரிவ்யூ காட்சி இல்லை என்று அப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்கு  ப்ரிவ்யூ காட்சி இல்லை என்று அப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘பசும்பொன்’ அண்ணன் தம்பிகளுக்கு நடுவே சண்டை நடக்கும் போது ராதிகா ஒரு டயலாக் பேசுவார-’யாரு வீட்டுல பாத்தவச்ச நெருப்போ…ஏ வீட்டுல பத்தியெரியுதே மக்கா’! இப்போது அந்த நிலைமையில்தான் இருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி!?

வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்புகளும், பேச்சுவார்த்தைகளும் ஒரு பக்கம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதன் இதன் லாப நஷ்டக்கணக்கு ஒரு இயக்குனரையும் பாதிக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! சீனு ராமசாமிக்கு நேர்ந்த சம்பவத்தை பார்த்த பிறகு நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

uday

ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் திரைப் பிரபலங்கள் மட்டுமில்லாமல், அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்து ஸ்பெஷல் ப்ரிவ்யூ ஷோ போடுவது வழக்கம்.இந்த முறை தொல்.திருமாவளவன் தவிர்த்து,எந்த அரசியல் தலைவர்களுக்கும் படம் பார்க்கவில்லை.

காரணம்? தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில்,எந்தக் கட்சி எந்த கூட்டணியில் இருக்கும் என்று தெரியாத நிலையில்,அதெல்லாம் சரியாக வராது மேலிட்டது உத்தரவாம்.

‘என் எல்லா படங்களையும் சர்வ கட்சி தலைவர்களுக்கும்,சிறப்பு காட்சியாக திரையிடல் செய்வதுண்டு.இம்முறை திரு.உதயநிதி ஸ்டாலின்,தமன்னா நடித்து வரும் 22ல் வெளிவரும் #கண்ணேகலைமானே திரைப்படத்திற்கு அவ்வாய்ப்பில்லை.கூட்டணிகள் தீர்மானிக்கின்றன பிரிவ்யூ காட்சிகளையும்’ என்று,தனது  டிவிட்டர் பக்கத்தில் தனது நிலை குறித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

அரசியல் !?