ஒரு பெண், இரண்டு கருப்பை, மூன்று குழந்தைகள் – மருத்துவத்துறையில் அதிசயம்

 

ஒரு பெண், இரண்டு கருப்பை, மூன்று குழந்தைகள் – மருத்துவத்துறையில் அதிசயம்

பெண் ஒருவர் இரண்டு கருப்பை மூலம் அடுத்தடுத்த மாதங்களில் 3 குழந்தைகள் பெற்றெடுத்த சம்பவம் மருத்துவத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஒருவர் இரண்டு கருப்பை மூலம் அடுத்தடுத்த மாதங்களில் 3 குழந்தைகள் பெற்றெடுத்த சம்பவம் மருத்துவத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டைக் கருப்பை 

வங்காளதேசம் நாட்டின் ஜெசோர் பகுதியில் உள்ள ஷர்ஷா கிராமத்தை சேர்ந்தவர் அரிபா சுல்தானா இதி. இவர் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார்.இதையடுத்து இவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது அரிபாவுக்கு இரட்டை கருப்பைகள் அமைந்துள்ளது தெரிய வந்தது.

double uterus

ஆச்சரியப்படும் விதமாக, அதற்கு அடுத்த மாதமே, இரண்டாவது கருப்பையிலும் அவர் கருவுற்றார். இதனால் ஒரே நேரத்தில் இரண்டு கருப்பையிலும் குழந்தைகளை சுமந்து கொண்டிருந்தார் அரிபா. அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

மூன்று குழந்தைகள் 

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் நாள் அரிபா முதல் கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன் பின்னர், ஒரு மாதத்துக்கு பிறகு மற்றொரு கருப்பை மூலம் மார்ச் 22-ஆம் நாள் அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

bangaladesh

இதுகுறித்து அரிபாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கையில், மருத்துவ துறையில் இது ஓர் அரிதான நிகழ்வு. இதுபோன்ற சம்பவத்தை நாங்கள் முதன்முதலாகப் பார்க்கிறோம். எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு முன்னால் இதுபோன்ற சம்பவத்தை நான் கேட்டதே இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க 

உடல் சூட்டைத் தணிக்க கண்டதையும் குடிக்காதீங்க! இதுதான் பெஸ்ட்!

டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா ? – வெளியான ஆய்வு முடிவுகள்