ஒரு பெண்ணின் வேலையை செய்ய எத்தனை ஆண்கள் தேவைப்படுவார்கள்? பொருளாதார நிபுணர்களுடான மோடி சந்திப்பை கலாய்த்த காங்கிரஸ்

 

ஒரு பெண்ணின் வேலையை செய்ய எத்தனை ஆண்கள் தேவைப்படுவார்கள்?  பொருளாதார நிபுணர்களுடான மோடி சந்திப்பை கலாய்த்த காங்கிரஸ்

ஒரு பெண்ணின் வேலையை செய்ய எத்தனை ஆண்கள் தேவைப்படுவார்கள்? என பொருளாதார நிபுணர்களுடான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.

மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெறுவதற்காக பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று பொருளாதார நிபுணர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் மற்றும் நிதின் கட்கரி கலந்து கொண்டனர்.

மோடியுடன் பொருளாதார நிபுணர்கள் சந்திப்பு

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனை குறிப்பிட்டு பொருளாதார நிபுணர்களுடான சந்திப்பை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் டிவிட்டரில், ஒரு பெண்ணின் வேலையை செய்ய எத்தனை ஆண்கள் தேவைப்படுவார்கள்? என கிண்டலாக பதிவு செய்து இருந்தது.   

நிர்மலா சீதாராமன்

அதேசமயம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோரின் டிவிட்டுக்கு நிர்மலா சீதாராமன் அலுவலகம் பதில் அளித்துள்ளது. அதில், சார், பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகளின் போது அமைச்சர் ஏற்கனவே, தொழிலதிபர்கள், நிபுணர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களை சந்தித்தார். மேலும் அவர் இப்போது பல மாதங்களாக  பல்வேறு தொழில்களின் பிரதிநிதிகள் மற்றும் பங்குதாரர்களுடன் உரையாடி வருகிறார் என பதில் அளிக்கப்பட்டுள்ளது.