ஒரு பீடிக்காக தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட தொழிலாளி…கடலூரில் பரபரப்பு!

 

ஒரு பீடிக்காக தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட தொழிலாளி…கடலூரில் பரபரப்பு!

உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர் வன்னியர்பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் டேனியல். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.  டயர் கம்பெனியில் வேலை செய்து வரும் இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது.  இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு தேவனாம்பட்டினத்தில் உள்ள மூத்தமகள் சித்ரா வீட்டில் தங்கியிருந்துள்ளார்.  இருப்பினும் அடிக்கடி கன்னியகோயில் பகுதிக்கு வந்து மதுகுடித்துவிட்டு செல்வது வழக்கம். 

ttn

இந்நிலையில்  நேற்று முன்தினம் மாலை தனது மகளிடம் கோவிலுக்கு செல்வதாகக் கூறி விட்டு மது குடிக்க டேனியல் கன்னியகோவில் வந்துள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை தேடிய போது  அவர் புட்புதர் ஒன்றில்பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடது வந்த அவர்கள் நடத்திய விசாரணையில் டேனியல் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.  இதை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

tn

இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அதேபகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில்  பிள்ளையார்குப்பம் நாடார் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜாராம் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில்,  கன்னியகோயில் பகுதியில் மதுகுடிக்கவந்த ராஜாராம், பச்சையம்மன் கோயில் அருகே போதையில் படுத்திருந்த டேனியலிடம் பீடி இருக்கும் என்று நினைத்து அவரது சட்டைப் பையில் கையை விட்டுள்ளார். இதனால் விழித்த டேனியல் ராஜாராமை திட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்த சென்ற டேனியல் அங்குள்ள புதர் அருகே சிறுநீர் கழித்து கொண்டிருக்கும் போது  அருகில் இருந்த கல்லை எடுத்து ராஜாராம் டேனியல் தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த டேனியல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதையடுத்து ராஜாராம் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. 

 

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராஜாராமிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.