ஒரு பன்றியின் விலை ரூ.5000! ஆனா ஒரு ஓட்டின் விலை ரூ.500 மட்டுமே!! வைரலாகும் போஸ்டர்

 

ஒரு ஓட்டின் விலை பன்றியின் விலையை விட குறைவு என அச்சிடப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு ஓட்டின் விலை பன்றியின் விலையை விட குறைவு என அச்சிடப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.  பணத்துக்காக தங்கள் வாக்கை விற்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவந்தாலும், இந்த பழக்கம் ஒழிந்தபாடில்லை. நவீன காலமாக பெட்ரோல் போடுவதற்கு டோக்கன், டோக்கன் மூலம் பணம் கொடுப்பது அல்லது பரிசுப்பொருள் கொடுத்து வாக்குகளை வாங்குவது அரங்கேறிவருகிறது. இதுகுறித்து புகார் அளிப்பவர்கல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

பன்றி

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27-ந்தேதி, 30-ந்தேதி என இரு கட்டமாக நடைபெறுகிறது. இந்தநிலையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை விமர்சித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘பன்றி விலையை விட, ஓட்டுக்கு விலை குறைவு’ என்றும் தேர்தலில் வாக்குகளை விற்போர்,மற்றும் வாங்குவோர் கவனத்திற்கு என்று தலைப்பிட்டு பல்லடம் அருகே பல்வேறு இடங்களில் கரைப்புதூர் மக்கள் மன்றம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் எருமை மாடு 50 ஆயிரம் ரூபாய், பசு மாடு 40 ஆயிரம் ரூபாய்,ஆடு 10 ஆயிரம் ரூபாய், நாய் 25 ஆயிரம் ரூபாய், பன்றி 3 ஆயிரம் ரூபாய். ஆனால், தேர்தலில் மக்களின் விலை 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை என அச்சிடபட்டுள்ளது. இது பன்றியின் விலையை விடக்குறைவு. சிந்தித்து பணம் பெறாமல், தன்மானத்துடன் வாக்களியுங்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு சுவரோடி சமூக வலைதளங்களிலும் உலாவருகிறது.