ஒரு பக்கம் துப்புரவு தொழிலாளர் காலில் விழறாங்க -மறுபக்கம் காலை உடைக்கிறாங்க-சுத்தம் செய்ய போனவர்களுக்கு நேர்ந்த சோகம் ..

ஒரு பக்கம் துப்புரவு தொழிலாளர் காலில் விழறாங்க -மறுபக்கம் காலை உடைக்கிறாங்க-சுத்தம் செய்ய போனவர்களுக்கு நேர்ந்த சோகம் ..

சில வாரங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் பற்றி சொல்ல  பொதுமக்களிடம்  சென்றபோது, ​​சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் குடிமை அதிகாரிகளை  உள்ளூர் மக்கள்  தாக்கிய  பிறகு இந்த அதிர்ச்சியான தாக்குதல் நடந்துள்ளது .

மத்திய பிரதேசத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் குழு ஒன்று சுத்தம் செய்வதற்காக சென்றபோது  ஒரு கும்பலால்  வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர், கோடரியால் தாக்கப்பட்டதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
சில வாரங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் பற்றி சொல்ல  பொதுமக்களிடம்  சென்றபோது, ​​சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் குடிமை அதிகாரிகளை  உள்ளூர் மக்கள்  தாக்கிய  பிறகு இந்த அதிர்ச்சியான தாக்குதல் நடந்துள்ளது .
போபால் நகராட்சியை சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் சிலர் கொய்லா மொஹல்லாவில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அந்த ஊரில் சுத்தம் செய்வதற்காக சென்ற போது அங்கிருந்த சிலரால் தாக்கப்பட்டனர் 
அதில் தீபக் மற்றும் அவரது சகாக்களை கோடரியால் அவர்கள் தாக்கினார்கள் .இந்த தாக்கல் வீடியோ ஊடகத்தில் வைரலாகி வருகிறது .அந்த வீடியோவில் ஒரு கும்பல்  ஒரு கட்டையால்  துப்புரவுப் பணியாளரைச் சுற்றி வளைத்து, அவரைத் தள்ளி இழுத்து அடிக்கின்றனர் .  இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார் விரைந்து வந்து ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.