“ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே கொரோனா பாதிப்பு தகவல் அளிக்கப்படும்” : மத்திய சுகாதாரத்துறை!

 

“ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே கொரோனா பாதிப்பு தகவல் அளிக்கப்படும்” : மத்திய சுகாதாரத்துறை!

மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும் என்று  அறிவிக்கபட்டது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் பொதுமுடக்கம்  மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும் என்று  அறிவிக்கபட்டது. 

இந்தியாவை பொறுத்தவரை நம் நாட்டில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49,333ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,688ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் இன்று முதல் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே கொரோனா பாதிப்பு தகவல் தெரிவிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காலை, மாலை என இருமுறை அளித்த மருத்துவ அறிக்கை அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்  இனி காலை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.