ஒரு நல்ல அதிகாரியால் அதிசயத்தை நிகழ்த்த முடியும்…. நிதின் கட்கரி….

 

ஒரு நல்ல அதிகாரியால் அதிசயத்தை நிகழ்த்த முடியும்…. நிதின் கட்கரி….

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் கடந்த புதன்கிழமையன்று சிறந்த மாவட்ட ஆட்சியர்களை விருது வழங்கி கவுரவம் செய்தது. இந்த விழாவில், ஜம்மு காஷ்மீரில் சிறுவர்கள் பள்ளிக்கு செல்வதற்காக பாலங்கள் அமைத்தது, குஜராத்தில் முன்எச்சரிக்கை அமைப்பை அமைத்து வெள்ளத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளை இல்லாமல் செய்தது, சட்டீஸ்கரில் மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தியது, இமாச்சல பிரதேசத்தில் குப்பை கிடங்கை பூங்காவாக மாற்றியது போன்ற பல மாற்றங்களை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இந்த விருது வழங்கும் விழாவில், நிதின் கட்கரி, ரவி சங்கர் பிரசாத், ஜிதேந்திர சிங், பியூஸ் கோயல், ராம் விலாஸ் பஸ்வான் ஆகிய 5 மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது: நல்ல நிர்வாகம் மற்றும் மேம்பாடு ஆகியவை அரசின் முக்கிய கொள்கைகள். நல்ல நிர்வாகத்தில் மாவட்ட கலெக்டர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நிர்வாகத்தின் முதுகெலும்பை அவர்கள்தான். இதுதான் புதிய இந்தியாவாக மாற்றும் மற்றும் இதுதான் பிரதமரின் கனவு. 

மாவட்ட ஆட்சியாளர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் அவசியம். குறுகிய வட்டத்தில் சிந்திப்பதிலிருந்து வெளியே வர வேண்டும், விரைவாக முடிவு எடுக்க வேண்டும் மற்றம் குழுவாக பணியாக மேற்கொள்ள வேண்டும். செயல்திறன் தணிக்கை அடிப்படையில் ஒரு அதிகாரி நல்லவராக இருந்தால் அவரால் அதியத்தை உருவாக்க முடியும். சமூக உணர்வு, குழு வேலை மற்றும் வேகமாக கண்காணித்து முடிவெடுப்பது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.