ஒரு தலைமுறை பார்க்காத பொருளாதார சரிவை இந்தியா சந்திக்கும்…. பிட்ச் கணிப்பு…

 

ஒரு தலைமுறை பார்க்காத பொருளாதார சரிவை இந்தியா சந்திக்கும்…. பிட்ச் கணிப்பு…

இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2 சதவீதமாக குறையும் என பிட்ச் ரேட்டிங்ஸ் தற்போது மதிப்பீடு செய்துள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றன. மேலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்பட பல நாடுகள் ஊரடங்கை செயல்படுத்தி உள்ளன. இதனால் அந்நாடுகளில் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிட்ச் ரேட்டிங்ஸ்

பிட்ச் ரேட்டிங்ஸ் இந்த ஆண்டு உலக பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும் என பிட்ச் ரேட்டிங்ஸ எதிர்பார்க்கிறது. மேலும் இந்த நிதியாண்டுக்கான (2020 ஏப்ரல்-2021 மார்ச்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை தற்போது 2 சதவீதமாக குறைத்துள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான வளர்ச்சியாகும்.

கொரோனா வைரஸால் பொருளாதாரத்தில் பாதிப்பு

2020-21ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 5.6 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என பிட்ச் ரேட்டிங்ஸ் 2019 டிசம்பரில் மதிப்பீடு செய்து இருந்தது. பின் கடந்த மாதம் 20ம் தேதியன்று தனது மதிப்பீட்டை 5.1 சதவீதமாக குறைத்தது. இந்நிலையில், தற்போது பிட்ச் ரேட்டிங்ஸ் இந்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீதான மதிப்பீட்டை மேலும் குறைத்துள்ளது.