ஒரு செருப்பை வாயில் கவ்வ கொடுத்து இன்னொரு செருப்பால் அதிமுகவை அடித்த குருமூர்த்தி!

 

ஒரு செருப்பை வாயில் கவ்வ கொடுத்து இன்னொரு செருப்பால் அதிமுகவை அடித்த குருமூர்த்தி!

ஏற்கெனவே ஒருமுறை அதிமுக தலைமையை ‘இம்பொடன்ட்’ என பொதுவெளியில் சொன்னபோதே ஒருவார்த்தை எதிராக‌ பேசாத அதிமுக தலைமையை இப்போது, ஒரு வாயில் செருப்பை கவ்வ கொடுத்து இன்னொரு செருப்பால் அடித்திருக்கிறார் குருமூர்த்தி. அவர்களுக்கு வெட்கமாக இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் வகிக்கும் பொறுப்பை முன்னிட்டு நமக்கு கேவலமாக இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என காகிதத்தில் வலுவான கூட்டணியை அமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் ஆடிட்டர் குருமூர்த்தி. ஏற்கெனவே ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களில் ஒருவராகவும், துக்ளக் பத்ரிகையின் ஆசிரியராகவும் கடுமையான வேலைப்பளுவுக்கு நடுவேயும், இந்த கூட்டணி அமைய பாடுபட்டவர் ஆடிட்டர். அதிமுகவை பாஜகவுடன் கூட்டணிக்கு ஒத்துக்கொள்ள வைப்பதில் அவருக்கு பெரிதாக ஒன்றும் வேலையில்லை. பேச்சுவார்த்தைக்கு அதிமுகவை வரவைக்க குருமூர்த்திக்கு ஒரு துண்டுசீட்டு போதுமானதாக இருந்தது. “இன்று இரவு 10 மணியளவில் கிரவுண் பிளாசா ஹோட்டலில் தனிமையில் என்னை சந்திக்கவும், சிபிஐ ரெய்டு காத்திருக்கிறது” என எழுதி அனுப்பினால் போதும், அதிமுக கூடாரமே ஹோட்டலில் 8 மணியில் இருந்தே காத்திருந்தன.

ADMK BJP Alliance

இவ்வாறு, குருமூர்த்தி காலால் இட்ட வேலையை தலையால் செய்துமுடித்த அதிமுகவினருக்கு, தேர்தல் முடிந்தபிறகு குருமூர்த்தி செய்த பதில் மரியாதையை கச்சிதமாக செய்திருக்கிறார். எப்படி தெரியுமா? அவர் ஆசிரியராக இருக்கும் துக்ளக் பத்ரிகையில் அட்டைப்பட கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், வீட்டினுள் விருந்து நடக்கிறது, பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் விருந்து உண்கிறார்கள், வெளியே ஓ.பன்னீர்செல்வமும், புதிய எம்.பியான ரவீந்திரநாத்தும் நாவில் எச்சில் ஒழுக வேடிக்கை பார்க்கிறார்கள்.

Thuglak cartoon

தமக்கு பந்தியில் இடம் கிடைக்கவில்ல என அழும் மகனிடம்  பன்னீர்செல்வம் “உஸ்ஸ்.. யாரும் அழப்படாது. நம்பளையெல்லாம் உள்ளே கூப்பிட மாட்டாங்க. கடைசியா, ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்” என ஆறுதல் சொல்வதாக கார்ட்டூன் வெளியாகி இருக்கிறது.

Gurumurthy

பாஜகவை கூட்டணியில் சேர்க்காமல் போயிருந்தால், அதிமுக கூடுதலாக ஒன்றிரண்டு தொகுதிகளை வென்றிருக்ககூடும். அதிமுக முதுகில் சவாரி செய்யாமல் தனியாக நின்றிருந்தால், 3 தொகுதிகளிலாவது பாஜகவுக்கு டெப்பாசிட் போயிருக்கும். பாஜகவின் பாவமூட்டையை அதிமுக சுமந்தும் கடைசியில் அவர்களுக்கு விஞ்சி நிற்பது அவமரியாதை மட்டுமே! ஏற்கெனவே ஒருமுறை அதிமுக தலைமையை ‘இம்பொடன்ட்’ என பொதுவெளியில் சொன்னபோதே ஒருவார்த்தை எதிராக‌ பேசாத அதிமுக தலைமையை இப்போது, ஒரு வாயில் செருப்பை கவ்வ கொடுத்து இன்னொரு செருப்பால் அடித்திருக்கிறார் குருமூர்த்தி. அவர்களுக்கு வெட்கமாக இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் வகிக்கும் பொறுப்பை முன்னிட்டு நமக்கு கேவலமாக இருக்கிறது. இப்படி எல்லாமா உடம்பு வளர்க்கணும்?