‘ஒரு சமூகமாக நாம் தோல்வி அடைந்து வருகிறோம்’ : நடிகர் மகேஷ் பாபு உருக்கம் !

 

‘ஒரு சமூகமாக நாம் தோல்வி அடைந்து வருகிறோம்’ : நடிகர் மகேஷ் பாபு உருக்கம் !

பிரியங்கா திரும்பி வரும் போது உதவி செய்வதாகக் கூறி அழைத்துச் சென்று முகமது பாஷா உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து பிரியங்காவை அங்கேயே எரித்துக் கொன்றனர்.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா, தினமும் அவரது இரு சக்கர வாகனத்தை  சின்ஷபள்ளி டோல்கேட்டில் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு பொது போக்குவரத்து மூலம் செல்வார். பிரியங்கா கடந்த 27 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அவசர வேலையாக, வழக்கம் போல  டோல்கேட்டில் நிறுத்திவிட்டுச் சென்ற பிரியங்கா திரும்பி வரும் போது உதவி செய்வதாகக் கூறி அழைத்துச் சென்று முகமது பாஷா உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து பிரியங்காவை அங்கேயே எரித்துக் கொன்றனர்.

pttn

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்துப் பல நடிகர்கள் மற்றும் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” நாளுக்கு நாள், மாதத்திற்கு ஒரு மாதத்திற்கு, வருடத்திற்கு ஒரு வருடம் … எதுவும் மாறவில்லை. ஒரு சமூகமாக நாம் தோல்வியடைகிறோம்! எனது தனிப்பட்ட முறையீட்டை மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அனுப்புகிறது. பிரதமர் மோடி மற்றும் கே.டி.ராமாராவ் அவர்களே.. எங்களுக்குக் கடுமையான சட்டங்கள் தேவை, இது போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை.. அந்த பெண்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல். உங்கள் வலி மீள முடியாதது! நம் நாட்டின் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் அனைவருக்கும் நீதி வழங்க ஒன்றாக வருவோம் … இந்தியாவைப் பாதுகாப்பாக ஆக்குவோம் !!” என்று தெரிவித்துள்ளார்.