ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 தான்! – இங்க இல்ல… ஆந்திராவில்

ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 தான்! – இங்க இல்ல… ஆந்திராவில்

இந்தியாவில் பல மாநிலங்களில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.150- 200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெங்காயத்தை மறக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், ஆந்திரப் பிரதேச அரசு ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.25க்கு விற்பனை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

babu

ஆந்திர அரசு இது வரை 35 ஆயிரம் குவிண்டால் வெங்காயத்தை ரூ.25 கோடிக்கு வாங்கி, அரசு சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.25க்கு விற்று வருகிறது. சோலாப்பூர், ஆல்வார், கர்னூல் உள்ளிட்ட இடங்களில் கிலோ ரூ.40 முதல் 120 வரை வாங்கி மானிய விலையில் ரூ.25க்கு விற்பனை செய்து வருவதாக ஆந்திர பிரதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

reddy

இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர சட்டப்பேரவையில் கூறும்போது, “விலையேற்றம் பற்றி விவாதிக்க வேண்டும். ஆனால், உண்மையில் ஆந்திராவில் வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு சொந்தமான பாரம்பரிய உணவுப் பொருள் விற்பனை நிலையத்தில் வெங்காயம் ரூ.25க்கு விற்கப்படுகிறது” என்றார்.
ஹெரிட்டேஜ் என்ற சூப்பர் மார்க்கெட் சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.