ஒரு ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன் தயாரிக்க இவ்வளவு தான் செலவாகுமா? – ஆச்சர்ய தகவல்!

 

ஒரு ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன் தயாரிக்க இவ்வளவு தான் செலவாகுமா? – ஆச்சர்ய தகவல்!

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உற்பத்தி கட்டண விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நியூயார்க்: சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உற்பத்தி கட்டண விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனை உலகம் முழுவதும் பரபரப்பாக அறிமுகம் செய்தது. அப்போது முதல் அந்த சாதனம் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்கள் தினம்தோறும் இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு முறை புதிய ஐபோன் மாடல் வெளியாகும்போதும் அதன் உதிரி பாகங்கள், சிறப்பம்சங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது பற்றி பலரும் இணையத்தில் ஆதாரத்துடன் தங்கள் சோதனைகள் தொடர்பாக வெளியிடுவார்கள்.

யூடியூப் இணையதளம் சென்று தேடினால் இது தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான வீடியோக்களை காண முடியும். இந்நிலையில், தற்போது முக்கியமான ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனை தயாரிக்க சுமார் 443 டாலர்கள் தான் செலவு பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் X (64 ஜிபி) மாடல் உற்பத்தி கட்டணத்தை விட வெறும் 50 டாலர்கள் மட்டுமே அதிகம் ஆகும். மேலும், ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் பொருட்களிலேயே அதிக விலை கொண்ட பாகமாக அதன் 6.5 இன்ச் OLED டிஸ்பிளே பேனல் இருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஏ12 சிப் விலை 72 டாலர்கள் அளவில் புதிய ஐபோனின் இரண்டாவது விலை உயர்ந்த பாகமாக இருக்கிறது. மூன்றாவதாக ஃபிளாஷ் ஸ்டோரேஜ் பாகத்திற்கு ஆப்பிள் 64 டாலர்களை செலவிடுவதாக கூறப்படுகிறது. இவற்றுடன் கேமராக்களுக்கு 44 டாலர்கள் மற்றும் இதர பாகங்களுக்கு 55 டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.