ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாய்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அதிசயம்!

 

ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாய்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அதிசயம்!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகில் இருக்கிறது விளக்கேத்தி என்கிற கிராமம்.இதையடுத்துள்ள அண்ணாமலைப் பாளையத்தில்தான் ஒரு எலுமிச்சம் பழத்தை 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகில் இருக்கிறது விளக்கேத்தி என்கிற கிராமம். இதையடுத்துள்ள அண்ணாமலைப் பாளையத்தில்தான் ஒரு எலுமிச்சம் பழத்தை 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.

எப்படி என்கிறீர்களா அதற்கு நீங்கள் பழந்தின்னி கருப்பண்ண  ஈஸ்வரசித்தர் என்கிற கிராம தேவதையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த கருப்பண்ண சாமி கோவில் 400 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.

குடும்பத்தில் பிரட்சினை உள்ளவர்கள், நோயுற்றோர் இந்தக்கோவிலுக்கு வந்து பழங்களை வைத்து வணங்கினால் அவர்களின் துண்பம் தீர்கிறதாம்.ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள்,தங்கள் ஜாதகத்தை கருப்பண்ணனின் காலில் வைத்து பழங்களுடன் வேண்டிக்கொண்டால் ஜாதகத்தில் உள்ள கண்டம் விலகிவிடும் என்ற நம்பிக்கை காலங்காலமாக இருக்கிறது.

இந்தக் கோவிலில் வருடந்தோறும் நவராத்திரி அமாவாசை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். வேட்டைக்காரன்,கருப்பண்ணசாமி,கன்னிமார் சாமி ஆகிய தெய்வங்களுக்கு பச்சை போடுதல்,மகா விரதம்,மற்றும் படைப்பு பூஜை போடுவது வழக்கம்.கொடுமுடியிலிருந்து காவிரி நீர் எடுத்து வரப்பட்டு பூஜை செய்து இரவில் பக்த்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

அன்னதானம் முடிந்த பிறகு,பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழம், கருப்பண்ணசாமி நெற்றியில் வைக்கப்பட்டிருக்கும் காசு,கையில் அணிவிக்கபட்டிருக்கும் வெள்ளி காப்பு,மோதிரம் ஆகியவை ஏலம் விடப்படும். அதை, பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுப்பார்கள்.வருடம் தோறும் நடைபெரும் இந்த விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. 

விழாவின் இறுதியில்த்தான் ஏலம் விடப்பட்ட ஒற்றை எலுமிச்சம் பழத்தை ஈரோட்டைச் சேர்ந்த ஒரு கருப்பண்ணசாமி பக்தர் 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அசத்தினார்.விழா முடிந்த பிறகு பக்தர்கள் அனைவருக்கும் ஒரு சீப்பு வாழைப்பழம் தரப்பட்டது.இப்படி பழமாகவே வாங்கி பழமாகவே தருவதால் தான் அவருக்கு பழந்தின்னி கருப்பண்ண சாமி என்று பேர் வந்ததோ!