ஒரு அடி கொடுத்த ஆசிரியருக்கு 100 அடி விழுந்த பரிதாபம்!

 

ஒரு அடி கொடுத்த ஆசிரியருக்கு 100 அடி விழுந்த பரிதாபம்!

ஆசிரியர் இருந்த வகுப்பறைக்குள் புகுந்த அவர்கள் ஆசிரியரை வெளியில் இழுத்து வந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

குஜராத்குஜராத் மாநிலத்தில் பள்ளி மாணவரை அடித்த ஆசிரியரை குடும்பமே சேர்ந்து சரமாரியாக அடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவரை ஆசிரியர் அடித்துள்ளார். இதனால் அந்த மாணவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாணவரை ஆசிரியர் அடித்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

school

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவரின் பெற்றோரும், உறவினர்களும் மறுநாள் பள்ளியில் திரண்டனர். மாணவரை தாக்கிய ஆசிரியர் இருந்த வகுப்பறைக்குள் புகுந்த அவர்கள் ஆசிரியரை வெளியில் இழுத்து வந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். குடும்பரே சேர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக ஆசிரியர் தாக்கப்பட்டதில் பலத்த காயம் அடைந்த ஆசிரியர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவமும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து இருதரப்பினரும் போலீசில் புகார் அளிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கழிவறையில் மாணவர்கள் கூச்சலிட்டதற்காக ஆசிரியர் கண்டித்தபோது சம்பந்தப்பட்ட மாணவர் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அவரைக் கன்னத்தில் அறைந்ததாகவும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஆசிரியரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததாகவும், ஆனால் அதற்குள் மாணவருடைய உறவினர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியரைத் தாக்கியதாகவும் பள்ளியின் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.