ஒருவாரத்திற்குப் பிறகு கேரளாவில் பிரேக் விட்டுள்ளது கனமழை!

 

ஒருவாரத்திற்குப் பிறகு கேரளாவில் பிரேக் விட்டுள்ளது கனமழை!

தென்மேற்கு பருவமழை தன் வேலையை முழுமையாக காட்டிவிட்டதாகவும், கேரளத்தில் இனிவரும் நாட்களில் கனமழைக்கான வாய்ப்பில்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனாலும், கோழிக்கோடு, கன்னூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஆங்காங்கே மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் முதல்வாரம் கேரளாவில் துவங்கவேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த வருடம் சற்றே சோம்பல் முறித்து வேலையை காட்டுவதற்குள் ஜூலையில் பாதி முடிந்துவிட்டது. லேட்டா வந்தாலும், ஒருவாரத்திற்கு விடாமல் கேரளா முழுமைக்கும் காட்டு காட்டென காட்டிவிட்டுதான் சென்றது. தென்மேற்கு பருவமழை தன் வேலையை முழுமையாக காட்டிவிட்டதாகவும், கேரளத்தில் இனிவரும் நாட்களில் கனமழைக்கான வாய்ப்பில்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனாலும், கோழிக்கோடு, கன்னூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஆங்காங்கே மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

Kerala Floods

கனமழை இல்லாவிட்டாலும், கேரள மீனவர்களுக்கான எச்சரிக்கை தொடர்கிறது. கேரள, லட்சத் தீவுகள் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்கு போகவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.  மூன்று மீட்டர் உயரத்திற்கு கடலலைகள் எழும்பவும் வாய்ப்பிருக்கிறதாம். கேரள மழைவெள்ள நிவாரணத்திற்கென இதுவரை 39 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.