ஒருவருடம் அணியில் ஆடவில்லை.. ஆனால் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்.. அஸ்வின் மாயாஜாலம்!!

 

ஒருவருடம் அணியில் ஆடவில்லை.. ஆனால் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்.. அஸ்வின் மாயாஜாலம்!!

ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற அஸ்வின், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற அஸ்வின், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இரு அணிகளும் மோதுகின்றன. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம் பெற்றார். கடந்த ஒரு வருடங்களாக இவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற போராடி வந்தார். அதில்  ஆறு மாதங்கள் காயம் காரணமாக வெளியேறி இருந்தாலும், அதற்கு அடுத்த சில மாதங்கள் டெஸ்ட் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். 

ashwin

மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தாலும், ஆடும் 11 வீரர்களில் இவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர், தனது சுழல் பந்து வீச்சால் தென்னாப்பிரிக்க வீரர்களை திணறடித்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்திருக்கிறார். 

டெஸ்ட் அரங்கில் இது இவருக்கு 27வது 5 விக்கெட்டுகள் ஆகும். குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மட்டுமே ஐந்தாவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும் எந்த வித தயக்கமும் இன்றி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்திய இவருக்கு சமூக வலைதளங்களிலும் முன்னாள் வீரர்கள் மற்றும் இந்நாள் வீரர்கள் என அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

முதல் இன்னிங்சில் 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 431 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் தற்போது இந்திய அணி ஆடி வருகிறது.

-vicky