ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

 

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பருவநிலை மாற்றத்திற்கான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றிய பிரதமர் மோடி, ”இந்தாண்டு இந்திய சுதந்திர தினத்திற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக ஒரு பெரிய இயக்கத்தை தொடங்கியுள்ளோம். உலகளவில் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

modi

பேசுவதற்கான நேரம் முடிந்து விட்டது; தற்போது உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் தொடர்பாக செயல்படவேண்டும். நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை தொடங்கியுள்ளோம்” என்று கூறினார்.