ஒருநாள் மேக்கப் செலவு ரூ.3 லட்சம் – வியப்பில் ஆழ்த்தும் அமெரிக்க அதிபர் மனைவி மெலனியா டிரம்ப்

 

ஒருநாள் மேக்கப் செலவு ரூ.3 லட்சம் – வியப்பில் ஆழ்த்தும் அமெரிக்க அதிபர் மனைவி மெலனியா டிரம்ப்

அமெரிக்க அதிபரான மெலனியா டிரம்ப்பின் ஒருநாள் மேக்கப் செலவு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான மெலனியா டிரம்ப்பின் ஒருநாள் மேக்கப் செலவு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மனைவி முன்னர் மாடல் அழகியாக பணி புரிந்தவர் ஆவார். மெலனியாவின் ஆடைகள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் வித்தியாசமானவை ஆகும். மெலனியா தனது ஒப்பனைக்கு நாளொன்றுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சம் செலவிடுவதாக கூறப்படுகிறது. ஒப்பனைகளை செய்வதற்கென்றே தனியாக கலைஞர்களை நியமித்துள்ளார். மேலும் மெலனியா ஒருமுறை அணிந்த ஆடையை மீண்டும் பயன்படுத்த மாட்டாராம். அவருடைய ஒரு ஆடையின் விலை ரூ.3 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

ttn

மெலனியா டிரம்ப் ஒருநாளைக்கு ஏழு வேளைகளில் உணவுகளை எடுத்துக் கொள்கிறார். பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காலை உணவாக ஓட்ஸில் தயாரிக்கப்பட்ட கஞ்சி ஆகியவை அதில் அடக்கம். மேலும் ஒரு நாளைக்கு சுமார் இரண்டரை லிட்டர் தண்ணீரை மெலனியா குடிப்பாராம். அத்துடன் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவற்றின் மாத்திரைகளை காலை வேளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக எடுத்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது.