ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தது பிளாக் கேப்ஸ்

 

ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தது பிளாக் கேப்ஸ்

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்று நியூசிலாந்து ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

ஆக்லாந்து: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்று நியூசிலாந்து ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை இந்தியா துவம்சம் செய்து தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. ஹாமில்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை தன்வசமாக்கி உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளும் மோதிய 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

ttn

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்டின் கப்தில் 79 ரன்களும், ராஸ் டெய்லர் 73 ரன்களும், ஹென்றி நிகோல்ஸ் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சஹல் 3 விக்கெட்டுகளும், ஷர்துள் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ttn

இதையடுத்து 274 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டி20 தொடரை இழந்த நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை வென்று இந்திய அணியை பழி தீர்த்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 55 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும், நவ்தீப் 45 ரன்களும் எடுத்தனர்.