ஒருத்தருக்கு ஒரு துப்பாக்கி… மத்திய அரசின் புதிய கொள்கை!?

 

ஒருத்தருக்கு ஒரு துப்பாக்கி… மத்திய அரசின் புதிய கொள்கை!?

நாட்டில் சீரமைக்கப்பட வேண்டிய விஷயங்களைத் தேடிப் பிடித்து ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. திட்டாதீங்க…. செய்தியை முழுசா படிச்சுப் பாருங்க… இந்தியாவில் பாதுகாப்புக்காக பல பிரபலங்களும், கோடீஸ்வர ஜாம்பவான்களும் லைசென்ஸ் எடுத்து துப்பாக்கி வைத்திருப்பார்கள்.

நாட்டில் சீரமைக்கப்பட வேண்டிய விஷயங்களைத் தேடிப் பிடித்து ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. திட்டாதீங்க…. செய்தியை முழுசா படிச்சுப் பாருங்க… இந்தியாவில் பாதுகாப்புக்காக பல பிரபலங்களும், கோடீஸ்வர ஜாம்பவான்களும் லைசென்ஸ் எடுத்து துப்பாக்கி வைத்திருப்பார்கள். அப்படி இதுநாள் வரையில் தனிநபர் ஒருவர் மூன்று துப்பாக்கிகளை வைத்திருக்கலாம் என்று இருந்து வந்த சட்டத்தை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திருத்தத்தின் படி, இனி ஒவ்வொரு நபரும் ஒரே ஒரு துப்பாக்கி மட்டுமே வைத்துக் கொள்ள முடியும்.  

gun

விரைவில் அமல்படுத்தப்படவிருக்கும் இந்தப் புதிய ஆயுதச் சட்டத்திருத்தம் 2019ன்படி, ராணுவத்தினரிமோ அல்லது போலீசாரிடமிருந்தோ திருடப்பட்ட துப்பாக்கி போன்ற ஆயுதங்களை இனி வைத்திருந்தாலோ, கடத்தல் மூலமாக வாங்கிய துப்பாக்கியையோ அல்லது கள்ளத் துப்பாக்கியோ வைத்திருப்போர் மற்றும் துப்பாக்கிகளைத் தவறாக உபயோகிப்போர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ள வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
துப்பாக்கிகள் தயாராகும் இடங்களில் இருந்து அவற்றைப் பயன்படுத்துவோருக்கு செல்வது வரை கண்காணிப்பது, பிரபலங்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவது உள்பட பல்வேறு பிரிவுகளில் புதியதாக சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது. அதனால் இனி இந்தியாவில் ஒருத்தருக்கு ஒரு துப்பாக்கி மட்டும் தான் வைத்திருக்க வேண்டும்!