ஒய்.எம்.சி.ஏ உள்ளிட்ட 1807 என்.ஜி.ஓ-க்களுக்கு தடை!

 

ஒய்.எம்.சி.ஏ உள்ளிட்ட 1807 என்.ஜி.ஓ-க்களுக்கு தடை!

விதிமுறைகள் மீறியதாக கூறி, 1807 என்.ஜி.ஓ-க்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
பிரதமராக 2014ம் ஆண்டு மோடி பதவி ஏற்றதிலிருந்து தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு உதவி பெறுவது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

விதிமுறைகள் மீறியதாக கூறி, 1807 என்.ஜி.ஓ-க்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
பிரதமராக 2014ம் ஆண்டு மோடி பதவி ஏற்றதிலிருந்து தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு உதவி பெறுவது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. முறைகேடாக நிதி உதவி பெற்றதாகவும் செயல்பட்டதாகவும்

mha

கூறி 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து நிதி உதவி பெறும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்கள் வருவாய் செலவு கணக்கை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி கணக்கு காட்டாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு மத்திய அரசின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி 1807 நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி உதவி பெறுவதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடை காரணமாக இந்த நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் வெளிநாட்டிலிருந்து எந்த ஒரு நிதி உதவியையும் பெற முடியாது. 
இந்த பட்டியலில் ராஜஸ்தான் பல்கலைக் கழகம், அலகாபாத் விவசாய நிறுவனம், குஜராத் யங் மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன் (ஒய்.எம்.சி.ஏ), கர்நாடகாவைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா கல்வி நிறுவனம், தேசிய வைராலஜி நிறுவனம் அடங்கும்.