ஒயின்ஷாப் வாசலில் நின்று சரக்கடித்த பெண்… அதிர்ச்சியில் உறைந்த குடிமகன்கள்: வைரல் வீடியோ!

 

ஒயின்ஷாப் வாசலில் நின்று சரக்கடித்த பெண்… அதிர்ச்சியில் உறைந்த குடிமகன்கள்: வைரல் வீடியோ!

காலம்காலமாக ‘குடிமகன்’களாக  இருக்கும்  சிலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

‘குடிமகன்கள்’ ஒயின்ஷாப்பில் முண்டியடித்து மதுவாங்குவதை நாம் பார்த்திருப்போம். ஆனால்  இளம்பெண்  ஒருவர் ஒயின்ஷாப்பில் சரக்கு வாங்கியதுடன் அதை அங்கேயே திறந்து குடித்த காட்சி, காலம்காலமாக ‘குடிமகன்’களாக  இருக்கும்  சிலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ttn

அந்த வீடியோவில் மாடர்ன் உடையில் உள்ள அந்த இளம்பெண் சரக்கு பாட்டிலை வாங்கி அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில்  பாட்டிலை  லாவகமாக ஓபன் செய்து மடமடவென குடிக்கிறார். பின் அங்கிருந்து சர்வசாதாரணமாகக் கிளம்புகிறார். இதை கண்டு அங்கிருந்தவர்கள் மலைத்து போய்  நிற்கின்றனர்.

அந்த பெண் யார்?  யாரிடமாவது சவால் விட்டு அதனால் இப்படி செய்தாரா? இல்லை,  சினிமா ஷூட்டிங்கா என்பது தெரியவில்லை. தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.