ஒப்பந்ததாரர் மீது புல்டோசர் விட்டு ஏற்றுவேன்: நிதின் கட்கரி ஆவேசம்

 

ஒப்பந்ததாரர் மீது புல்டோசர் விட்டு ஏற்றுவேன்: நிதின் கட்கரி ஆவேசம்

சாலைகள் சரியில்லை என்றால் ஒப்பந்ததாரர் மீது புல்டோசர் விட்டு ஏற்றுவேன் என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆவேசமாக பேசியுள்ளார்

டெல்லி: சாலைகள் சரியில்லை என்றால் ஒப்பந்ததாரர் மீது புல்டோசர் விட்டு ஏற்றுவேன் என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆவேசமாக பேசியுள்ளார்.

பாஜக நிர்வாகியும் எழுத்தாளருமான துஹின் சின்ஹா எழுதியுள்ள ‘இந்தியா இன்ஸ்பையர்ஸ்’ என்ற புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலைகள் நாட்டின் சொத்து, அதன் தரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. ஒப்பந்ததாரர்களிடம் நான் ஒன்றை சொல்ல எப்போதும் தயங்கியதே இல்லை. அது, சாலைகள் தரமாக இல்லை என்றால் அவர்கள் மீது புல்டோசரை விட்டு ஏற்றுவேன் என்பதே என்றார் ஆவேசமாக.

மேலும், ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களை இதுவரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த நிதின் கட்கரி, டெல்லியில் உள்ள எனது அலுவலகத்துக்கு வந்து எந்த ஒப்பந்ததாரரும், சாலைத் திட்ட ஒப்பந்தங்களை பெற்றது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.