‘ஒன் சைடு ரோமியோ’வால் ஏற்பட்ட ஆசிட் வீச்சு…மீண்டு வந்த சிங்கப்பெண்!

 

‘ஒன் சைடு ரோமியோ’வால் ஏற்பட்ட ஆசிட் வீச்சு…மீண்டு வந்த சிங்கப்பெண்!

ஒருவர் தற்போது அதிலிருந்து மீண்டு மற்ற பெண்களுக்குக் கூடுதல் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண் மீண்டும் கால்பந்து ஆட வருவார். அப்போது சிங்க பெண்ணே பாடல் ஒலிக்கும். அப்போது பெண்கள் மட்டுமல்லாது ஆண்களுக்கும் பெண்கள் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டிருக்கும். அதேபோல் ஆசிட்  வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்போது அதிலிருந்து மீண்டு மற்ற பெண்களுக்குக் கூடுதல் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

 

ttn

நேபாளத்தைச் சேர்ந்த பிந்தாபாஷினி 2012-ம் ஆண்டு பிந்தாபாஷினி 12-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். அப்போது அவரை  ஒரு தலையாக காதலித்த திலிப் ராஜ் கேசரி  என்ற இளைஞர் காதலை ஏற்காத பிந்தாபாஷினி மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் பிந்தாபாஷினி முனிகம் முழுவதும் சிதைந்து கருகி போயுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்த அந்த பெண் தற்போது மீண்டும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு சென்றுள்ளார். இதுமட்டுமின்றி தன்னை போல் ஆசிட் வீச்சால்  பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் உதவி செய்து வருகிறார். 

ttn

பிந்தாபாஷினி தனது முகத்தை மீண்டும் சீரமைக்கக் கடந்த 6 ஆண்டுகளாக மதுரையில் உள்ள தேவதாஸ் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு முழுமையாக முக அமைப்பு கிடைத்துள்ளது. உறுதியான மன வலிமையால் மீண்டும் வந்துள்ள இந்த சிங்க பெண்ணுக்கு உண்மையில் ஒரு பெரிய சல்யூட்…