ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியானது

 

ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியானது

ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் தொடர்பான டீசர் வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின்  விளம்பர வீடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அதன் மூலம் ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. இந்த அம்சத்தை ஒன்பிளஸ் “ஸ்கிரீன் அன்லாக்” என அழைக்கிறது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் இருக்காது என்பதை ஒன்பிளஸ் உறுதி செய்திருக்கிறது. ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஸ்மார்ட்போனில் அதிகளவில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்த முடிந்தது என ஒன்பிளஸ் இணை நிறுவனர் கால் பெய் தெரிவித்துள்ளார்.

ஒன்பிளஸ் 6 போன்றே புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்படும் என்றும், முந்தைய ஸ்மார்ட்போனினை விட அதிகளவு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ஒன்பிளஸ் 6டி மாடலில் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், 2340×1080 AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் ஆகிய வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 16 எம்.பி. + 20 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ அம்சங்கள் வழங்கப்படலாம். ஒன்பிளஸ் 6டி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ.39,718 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.