ஒன்பது வயதுக்குள் பிரபலம், பத்து துவங்குதற்குள் மரணம்! கொடுமை!

 

ஒன்பது வயதுக்குள் பிரபலம், பத்து துவங்குதற்குள் மரணம்! கொடுமை!

உடல்நல குறைவு காரணமாக ஆருணியை மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றதும், அங்கே மருத்துவ சோதனைகளின் முடிவில் ஆருணிக்கு பன்றிக்காய்ச்சல் இருபப்தும் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகும் ஆருணியை காப்பாற்ற முடியவில்லை. பெற்றோர் மற்றும் ஃபாலோயர்கள் யாரின் வேண்டுதலும் செவிசாய்க்கப்படவில்லை. ஆருணி மறைந்தார்.

டிக்டாக் என்றாலே அபத்தமும், ஆபாசமும் சல்லிசான விலையில்/விலையில்லாமல் கிடைக்கும் என்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கும்வகையில் ஒரு சில வீடியோக்கள் மனதை கவரும். அதுவும் குழந்தைகளின் டிக்டாக் வீடியோ என்றால் சொல்லவா வேண்டும்? ஒன்பதே வயதான கேரளாவின் ஆரூணி வெளியிடும் டிக்டாக் கேரளா தாண்டியும் நிறைய ரசிகர்களை கவரந்ததில் ஆச்சர்யம் இல்லை. கிட்டத்தட்ட பதினாறாயிரம் பேர் அவருடைய ட்விட்டர் கணக்கை பின்பற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீடியோக்கள் எதுவும் வரவில்லை.

Aaruni No More

விசாரணைக்குப் பிறகுதான், உடல்நல குறைவு காரணமாக ஆருணியை மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றதும், அங்கே மருத்துவ சோதனைகளின் முடிவில் ஆருணிக்கு பன்றிக்காய்ச்சல் இருபப்தும் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகும் ஆருணியை காப்பாற்ற முடியவில்லை. பெற்றோர் மற்றும் ஃபாலோயர்கள் யாரின் வேண்டுதலும் செவிசாய்க்கப்படவில்லை. ஆருணி மறைந்தார். ஒன்பதே வயசுங்க!