ஒன்பது நிமிடம் விளக்கு அணைக்கும் போது மின்வாரிய ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும்! – மின்வாரியம் உத்தரவு

ஒன்பது நிமிடம் விளக்கு அணைக்கும் போது மின்வாரிய ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும்! – மின்வாரியம் உத்தரவு

பிரதமர் மோடி அறிவித்துள்ள ஒன்பது நிமிட விளக்கேற்றும் நிகழ்வின்போது மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி அறிவித்துள்ள ஒன்பது நிமிட விளக்கேற்றும் நிகழ்வின்போது மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

tneb

கொரோனா ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு ஒன்பது நிமிடங்களுக்கு விளக்குகளை அணைத்துவிட்டு, வீட்டில் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும். மாடி, பால்கனியில் தங்கள் மொபைல் டார்ச்லைட் அல்லது டார்ச்லைட்டை ஒளிரச் செய்ய வேண்டும் என்று மோடி அறிவுறுத்தியுள்ளார். மோடியின் இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கோலம் போட்டால் சிஏஏ போய்விடும் என்று கூறிய நீங்கள் விளக்கு ஏற்றுவதில் என்ன பிரச்னை என்று ஏதேதோ காரணத்தை கூறி முட்டுக் கொடுத்து வருகின்றனர் பா.ஜ.க ஆதரவாளர்கள்.

modi-speech

இந்த நிலையில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்று மோடி கூறியிருப்பதால் மின்சார வாரியம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இரவு 9 மணிக்கு அனைவரும் மின் விளக்குகளை அணைக்கும்போது, மின்சாரத்தின் தேவை பல மடங்கு வீழ்ந்துவிடும். அதேபோல், ஒன்பது நிமிடம் கழித்து எல்லோரும் விளக்குகளை ஆன் செய்யும் போது திடீரென்று தேவை அதிகரிக்கும். இதனால், மின்மாற்றி உள்ளிட்டவற்றில் பிரச்னை வரலாம் என்று மின்சார வாரியம் அச்சம் தெரிவித்துள்ளது. இதனால், பொறியாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களில் இருக்க வேண்டும். தேவைக்கு ஏற்றபடி செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரக்கைவிடுத்துள்ளது.