‘ஒத்த செருப்பு’ படத்தை திரையரங்குகளிலிருந்து தூக்குகிறார்கள்! கதறும் பார்த்திபன்

‘ஒத்த செருப்பு’ படத்தை திரையரங்குகளிலிருந்து தூக்குகிறார்கள்! கதறும் பார்த்திபன்

பெரிய படங்கள் வரும்போது, நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சிறிய படங்களை திரையரங்குகளில் இருந்து தூக்குவது பிணமாலையை எடுத்து, மணமாலை போடுவதற்கு சமமானது என நடிகர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார்.

பெரிய படங்கள் வரும்போது, நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சிறிய படங்களை திரையரங்குகளில் இருந்து தூக்குவது பிணமாலையை எடுத்து, மணமாலை போடுவதற்கு சமமானது என நடிகர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் வெளியாகி 2 வாரங்களாகிறது. பல்வேறு நேர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் பல திரையரங்குகளில் ஒத்தசெருப்பு படம் தூக்கப்படுகிறது.  இது தொடர்பாக, சென்னை ஃபிலிம் சேம்பரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, மூத்த நடிகர் ராதாரவி உள்பட பலரும் பங்கேற்றனர். ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு காப்பான், நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்கள் வெளியானதால் ஒத்த செருப்பு ஓரங்கட்டப்படுவதாக இயக்குநர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார். 

Otha seruppu

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், “ஒத்தசெருப்பு படம் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் சூழலில் தொடர்ச்சியாக மற்ற படங்கள் ரிலீஸ் ஆகியிருப்பதால் ஒத்தசெருப்பு படம் ஒரே ஒரு  காட்சி மட்டுமே திரையிடப்படுகிறது. திரையரங்க உரிமையாளர்களிடம் இது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அமைச்சர் கடம்பூர் ராஜீ உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியிருப்பது நம்பிக்கையளிக்கிறது. நள்ளிரவு ஒரே ஒரு காட்சி மட்டுமே திரையிடப்படுகிறது.  பெரிய படங்கள் வரும்போது, நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சிறிய படங்களை திரையரங்குகளில் இருந்து தூக்குவது பிணமாலையை எடுத்து, மணமாலை போடுவதற்கு சமம்” எனக் கூறினார்.