‘ஒத்த செருப்பு’ படத்தை ஒதுக்கிய விகடன் விருதுகள்: டிவிட்டரில் கலாய்த்த பார்த்திபன்

 

‘ஒத்த செருப்பு’ படத்தை  ஒதுக்கிய  விகடன் விருதுகள்: டிவிட்டரில் கலாய்த்த பார்த்திபன்

இப்படத்தைக் கண்ட அனைவரும் இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத பெரும் முயற்சி இது என்று பாராட்டினர்.

இயக்குநரும்  நடிகருமான பார்த்திபன் பேசுவதும் சரி அவர் எடுக்கும் படங்களும் சரி எப்போதும்  சற்று வித்தியாசப்பட்டிருக்கும். இவரது சமீபத்திய படைப்பு ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7.ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை  இயக்கியுள்ளார் பார்த்திபன். இப்படத்தைக் கண்ட அனைவரும் இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத பெரும் முயற்சி இது என்று பாராட்டினர். பல்வேறு விருதுகளைப் பெற்ற  ஒத்த செருப்பு படத்துக்கு கிடைத்துள்ளது. 

ttn

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் ஆனந்த விகடன் விருது இந்தாண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  அதில் ஒத்த செருப்பு படத்துக்கு விருது அறிவிக்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு பலராலும் வியந்து பாராட்டப்பட்ட  ஒரு படத்துக்கு ஏன்  விருது கொடுக்கவில்லை என்று குழம்பி இருந்த நிலையில் டிவிட்டரில் ரசிகர் ஒருவர், ‘மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. சிறந்த திரைக்கதை,சிறந்த ஒலிப்பதிவு பிரிவுகளில் விருதினை  நிச்சயம் வெல்ல அனைத்து தகுதிகளும் உள்ள படம். இந்த ஆண்டு விகடன் விருதுகள் தேர்வு செய்யப்பட்ட விதம் சர்ச்சைக்குரியது’ என்று பதிவிட்டுள்ளார். 

கடன் பட்டார் நெஞ்சம் போல்…
வி’கடன் கண் படாதார்
கலக்கம்தான்! https://t.co/deBR1VBgNx

— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 9, 2020

இதற்கு பதிலளித்துள்ள நடிகரும் இயக்குநருமான  பார்த்திபன், ‘கடன் பட்டார் நெஞ்சம் போல்…வி’கடன் கண் படாதார் கலக்கம்தான்!’ என்று பதிவிட்டுள்ளார்.