ஒதுக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள்? களத்தில் இறங்கிய உம்மா பாய்ஸ் முகநூல் குழு

 

ஒதுக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள்? களத்தில் இறங்கிய உம்மா பாய்ஸ் முகநூல் குழு

கஜா புயல் பாதித்த டெல்டா மக்களின் தற்போதைய சூப்பர் ஹீரோக்களாக வலம் வருகிறார்கள் ‘உம்மா பாய்ஸ்’ முகநூல் குழுவினர்.

சென்னை: கஜா புயல் பாதித்த டெல்டா மக்களின் தற்போதைய சூப்பர் ஹீரோக்களாக வலம் வருகிறார்கள் ‘உம்மா பாய்ஸ்’ முகநூல் குழுவினர்.

வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்த போது தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உருக்குலைய செய்துள்ளது. ஏராளமானோர் வீடுகளை இழந்து தண்ணீருக்கும், உணவுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட தற்போது வரை முழுமையாக சென்றடையவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்கள், முதியோர் என பெண்களும், அவர்களுக்கு உதவ முடியாத கையறு நிலையில் ஆண்களும் பெரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த அவல நிலையை கண்டு பல்வேறு தரப்பினரும், தங்களால் இயன்றதைத் தன்னை ஆளாக்கிய மக்களுக்கு செய்துவிட வேண்டும் என்று துணிவாக செயல்பட்டு வருகின்றனர். அதில் தனித்துவமாக இயங்கி வருபவர்கள் ‘உம்மா பாய்ஸ்’.

umma boys

முகநூலில் பலருக்கும் பரிட்சமாகி இருக்கும் இந்த குழுவைச் சேர்ந்த நண்பர்கள், தங்களால் இயன்றதை வைத்து நிவாரண உதவிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இதை பார்த்து உறைந்த நம் மக்களும், அவர்களால் இயன்ற சில பொருளாதார உதவி மற்றும் நிவாரண பொருட்களை கொடுத்து உதவுகின்றனர். அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து டெல்டா மக்களின் துயரில் பங்கெடுக்க கை கொடுப்போம்! டெல்டாவை காப்போம்!