ஒட்டக சிவிங்கியாக மாறி மருந்து வாங்கப் போன சீனப் பெண்!.

 

ஒட்டக சிவிங்கியாக மாறி மருந்து வாங்கப் போன சீனப் பெண்!.

தனது வயதான தந்தை வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை வாங்க மருத்துவமனைக்குப் போக முடியாத நிலையில் அந்த சீனப் பெண் கண்டு பிடித்த புதுவழி இப்போது சீனா மொத்தமும் பேசு பொருளாக ஆகி இருக்கிறது

லஸ்ஹோ என்கிற தென்மேற்கு சீனாவில் இருக்கிறது சிசூகான் மாநிலம்த்தில் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கக் கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில்லை.தனது வயதான தந்தை வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை வாங்க மருத்துவமனைக்குப் போக முடியாத நிலையில் அந்த சீனப் பெண் கண்டு பிடித்த புதுவழி இப்போது சீனா மொத்தமும் பேசு பொருளாக ஆகி இருக்கிறது. 

china-women.jpg1

அந்தப் பெண் காற்றடித்தால் ஆள் உள்ளே நுழைந்து கொள்ளும் அளவுக்குப் பெரிதாகக்கூடிய இரண்டு ஒட்டகச் சிவிங்கி பொம்மைகளை ஆன் லைனில் ஆர்டர் செய்து வாங்கினார்.அவை வந்ததும் ஒரு பொம்மைக்குள் நுழைந்து காற்றடித்து சிறு சிவிங்கி பொம்மையாக மாறி அப்படியே மருத்துவமனைக்குப் போய் தன் தந்தைக்கு மருந்து வாங்கி வந்து விட்டார்.

china-women

முகத்துக்கு மட்டுமல்லாமல் காலில் இருந்து தலைவரை கவர் செய்துகொண்டு அவர் போய் மருந்து வாங்கிவரும் காட்சி இணையத்தில் பரவி வருவதுடன் இது சீனாவில் பல விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. இது போன்ற பிளாஸ்டிக் பொம்மைகளுக்குள் புகுந்து கொள்வது பாதுகாப்பானது அல்ல,இதை ஒரு முறை பயன்படுத்திய பிறகு சுத்திகரிப்பது எப்படி என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.சீனாவுக்கு வெளியில் இருப்பவர்களுக்கோ இப்போதுதான் சீனாவில் போதுமான மருத்துவ உபகரணங்கள்,மாஸ்க்குகளுக்குகூட பஞ்சம் என்பது தெரியவந்து இருக்கிறது.