ஒட்டகத்தில் இருந்து கம்பளி… கிலோ 50 ஆயிரம் ரூபாயா?.. அப்படி என்ன இருக்கு இதுல

 

ஒட்டகத்தில் இருந்து கம்பளி… கிலோ 50 ஆயிரம் ரூபாயா?.. அப்படி என்ன இருக்கு இதுல

விகுனா ரக ஓட்டகங்களின் கம்பளிக்கு அதிக விலை கிடைப்பதால், தீவிர வேட்டை பெரு நாட்டின் மலைப்பகுதியில் நடந்துள்ளது.

விகுனா ரக ஓட்டகங்களின் கம்பளிக்கு அதிக விலை கிடைப்பதால், தீவிர வேட்டை பெரு நாட்டின் மலைப்பகுதியில் நடந்துள்ளது.

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் ஆன்ட்டிஸ் மலைப்பகுதி உள்ளது. இதன் உச்சியில் விகுனா ரக ஒட்டகங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த ஓட்டகங்களின் உரோமங்களில் தயாரிக்கப்படும் கம்பளிக்கு மிக உயர்ந்த விலை கிடைப்பதால், இத்தகைய ரக ஒட்டகங்களை தேடிப்பிடிக்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Camel

சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை உயரம் சென்று மலைப்பகுதியில் வாழும் இந்த ஒட்டகங்களை பிடிக்க மக்களும் மலை உச்சிக்கு சென்று தீவிரமாக தேடி வளைத்து பிடித்து இருக்கின்றனர். ஒரே நாளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் பிடிபட்டு இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்த ஒட்டகங்களில் இருந்து தயாரிக்கப்படும் கம்பளி விலை கிலோ ஒன்றுக்கு இந்திய மதிப்பின்படி 50 ஆயிரம் ரூபாய் ஆகும். 

Camel

சாதாரணமாக இதை சம்பாதிக்க அப்பகுதி மக்கள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரே நாளில் இவ்வளவு தொகை கிடைப்பதால் எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயாராக இருக்கின்றனர். 

ஒரே நாளில் பிடிக்கப்பட்ட இத்தனை ஒட்டகங்களுக்கும் அறுவை இயந்திரங்கள் மூலம் மேலிருக்கும் ரோமங்கள் பிரித்து எடுக்கப்பட்டன. கம்பளிகளுக்காக ரோமங்கள் எடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் மலைப்பகுதிக்கு அனுப்பப்பட்டன.

Camels

வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற நிகழ்வு அம்மலைப்பகுதியில் நடக்கும் என்பதால் இதை காண திரளானோர் கூடியிருந்தனர்.