ஒடிஷாவில் அதிர்ச்சி… எச்.ஐ.வி பாதித்த கர்ப்பிணிக்கு 36 மணி நேரமாக சிகிச்சை மறுத்த மருத்துவமனை!

 

ஒடிஷாவில் அதிர்ச்சி… எச்.ஐ.வி பாதித்த கர்ப்பிணிக்கு 36 மணி நேரமாக சிகிச்சை மறுத்த மருத்துவமனை!

ஒடிஷாவில் எச்.ஐ.வி பாதித்த கர்ப்பிணிக்கு 36 மணி நேரமாக சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் ஜாம்தா பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் கர்ப்பிணி ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்துவந்த ஜம்தா பகுதி ஆரம்ப சுகாதார நிலையம் அவரை டிசம்பர் 12ம் தேதி மயூர்பஞ்ச் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. அவருடன் ஆஷா என்ற கிராமப்புற சுகாதார செவிலியரையும் அனுப்பியுள்ளது.

ஒடிஷாவில் எச்.ஐ.வி பாதித்த கர்ப்பிணிக்கு 36 மணி நேரமாக சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயூர்பஞ்ச் மாவட்டம் ஜாம்தா பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் கர்ப்பிணி ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்துவந்த ஜம்தா பகுதி ஆரம்ப சுகாதார நிலையம் அவரை டிசம்பர் 12ம் தேதி மயூர்பஞ்ச் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. அவருடன் ஆஷா என்ற கிராமப்புற சுகாதார செவிலியரையும் அனுப்பியுள்ளது. ஆனால், அவருக்கு எய்ட்ஸ் உள்ளதால் சிகிச்சை அளிக்க முடியாது என்று மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

pregnant women

எச்.ஐ.வி தொற்று உள்ளதால் அந்த கர்ப்பிணியின் உடல்நிலை எப்படி உள்ளது என்று தொட்டுக்கூட பார்க்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர் என்று அந்த கர்ப்பிணியின் கணவர் கண்ணீரோடு கூறுகிறார்.
கிட்டத்தட்ட 36 மணி நேரம் ஆகியும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற செய்தி ஒடிஷா ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வேகவேகமாக அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைகள் தொடங்கியுள்ளனர். அறுவைசிகிச்சைக்குப் பிறகு அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்.
இது குறித்து ஒடிஷா சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் கூறுகையில், “கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளேன்” என்றார்.
எச்.ஐ.வி தொற்று தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய மருத்துவர்களே, எய்ட்ஸ் நோயாளிகளை புறக்கணித்திருப்பது, அதுவும் நிறைமாத கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.