ஒடிசா vs ஹைதராபாத் – வெல்லப்போவது யார்? – இது ISL கால்பந்து திருவிழா

 

ஒடிசா vs ஹைதராபாத் – வெல்லப்போவது யார்? – இது ISL கால்பந்து திருவிழா

கிரிக்கெட் என்றால் ஐபிஎல் போட்டிகள் என்பதுபோல, கால்பந்து என்றால் ISL போட்டிகள்தான். ISL கால்பந்து திருவிழா தொடங்கி ஆட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டன. கொரோனா பாதிப்பால் பல போட்டிகள் இந்தியாவில் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டிந்தது. இந்நிலையில் பெரிய அளவான போட்டி வெற்றிகரமாக கோவாவில் நடந்து கொண்டிருக்கிறது.

கோல், ரெட் கார்டு, ஃபெனாலிட்டி என கால்பந்து ரசிகர்களின் பிபியை ஏற வைத்துக்கொண்டிருக்கிறார்கள் அணிகள்.

ஒடிசா vs ஹைதராபாத் – வெல்லப்போவது யார்? – இது ISL கால்பந்து திருவிழா

முதல் போட்டியில் மோதிய அணிகள் ATK Mohun Bagan vs கேரளா பிளாச்டர்ஸ். ஸ்டார் பிளேயர்ஸைக் கொண்ட அணி ATK Mohun Bagan. ராய்கிருஷ்ணாவின் அதிரடி கோல் ATK Mohun Bagan அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

இரண்டாம் போட்டியில் NorthEast United FC அணியை எதிர்கொண்டது மும்பை அணி. கெளஹாத்தியை மையமாகக் கொண்டது NorthEast United FC அணி. இதில், NorthEast United FC அணி 1:0 எனும் கணக்கில் மும்பையை வென்று, இந்தத் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

ஒடிசா vs ஹைதராபாத் – வெல்லப்போவது யார்? – இது ISL கால்பந்து திருவிழா

மூன்றாம் போட்டி, கோவா vs பெங்களூரூ என்று இருந்தது. இரு அணிகளும் அதிரடியாக கோல்களைப் போட்டனர். ஆனால், போட்டியின் சமனில் முடிந்தது.

இன்று நான்காம் போட்டி. இதில் மோதிக்கொள்ளப்போவது ஒடிசா மற்றும் ஹைதராபாத் அணிகள். இரு அணிகளுமே இன்னும் ஒருமுறைக்கூட ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றதில்லை. அதனால், முதல் போட்டியிலிருந்தே வெற்றியை தனக்காக்கும் முயற்சியில் ஈடுபடும். அதற்காக, கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒடிசா vs ஹைதராபாத் – வெல்லப்போவது யார்? – இது ISL கால்பந்து திருவிழா

இன்றைய போட்டி கோவா GMS மைதானத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.