ஒடிசாவை நெருங்கும் ஃபனி புயல்…எட்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஊரைவிட்டு வெளியேற்றம்..

 

ஒடிசாவை நெருங்கும் ஃபனி புயல்…எட்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஊரைவிட்டு வெளியேற்றம்..

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசாவை தாக்கிய கடும் புயலால் 10,000 மக்கள் உயிரிழந்ததை மறக்க முடியாது.

கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வாழும் 8 லட்சம் மக்களை இந்திய அரசாங்கம் கப்பல்கள், பேருந்துகள் மற்றும் ரயில்களின் மூலம் இடமாற்றம் செய்து வருகிறது. ஃபனி புயல் இன்னும் 24 மணி நேரத்துக்குள் கரையை கடக்க இருக்கிறது, அதன் சீற்றம் மோசமானதாக இருக்கும்  என்பதால் இந்த முடிவு.

வங்காள வளைகுடாவின் மேற்கு பகுதியில் ஃபனி புயல் மையம் கொண்டிருக்கிறது என இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்திருக்கிறது.

fani

ஒடிசா மாநில வானிலை ஆராய்ச்சி நிலையம் ஃபனி புயலை 3-ஆம் ரக இடைப்பட்ட வகை புயல் என்கிறது. இதன் வேகம் 200 kph (125 mph) என குறிப்பிட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இருந்து 8 லட்சம் மக்களை புயல் பாதுகாப்பு மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகிய இடங்களுக்கு இடமாற்றம் செய்கின்றனர்.

இதுகுறித்து சிறப்பு நிவாரண ஆணையர் பிஷ்னுபடா செதி, குறிப்பிட்ட நேரத்துக்குள் மக்களை இடமாற்றம் செய்ய நாங்கள் உச்சபட்ச முயற்சியை செய்து வருகிறோம் என்றார்.

zfani

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள சுற்றுலா பயணிகள் கடற்கரை நகரங்களை விட்டு வெளியேற வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடல் சற்று சீற்றத்துடன் காணப்படுவதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசாவை தாக்கிய கடும் புயலால் 10,000 மக்கள் உயிரிழந்ததை மறக்க முடியாது. 2013-ஆம் ஆண்டு இதேபோன்ற சூழலில் அதிகப்படியான மக்களை இடமாற்றம் செய்ததால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.