ஒடிசாவின் முதல்வராக 5வது முறையாக பதவியேற்கிறார் நவீன் பட்நாயக்

 

ஒடிசாவின் முதல்வராக 5வது  முறையாக பதவியேற்கிறார் நவீன் பட்நாயக்

ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பிஜூ ஜனதா தளத்தின் வெற்றியைத் தொடர்ந்து அம்மாநில முதல்வராக 5-வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்க உள்ளார். 

புவனேஸ்வர்: ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பிஜூ ஜனதா தளத்தின் வெற்றியைத் தொடர்ந்து அம்மாநில முதல்வராக 5-வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்க உள்ளார். 

naven

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் 147 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதில் 117 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் அக்கட்சியின் தலைவர்  நவீன் பட்நாயக் அம்மாநில முதல்வராக 5வது முறையாக  பதவியேற்கவுள்ளார். அதேபோல்  21 லோக்சபா தொகுதிகளில் அக்கட்சி 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

odisha

ஒடிசாவைப் பொறுத்தவரையில் பிஜூ ஜனதா தளம் மாபெரும் சக்தி வாய்ந்த கட்சியாகக் கருதப்படுகிறது. முன்னதாக கடந்த 2000-ம் ஆண்டு ஒடிசாவின் முதல்வரான நவீன் பட்நாயக் தொடர்ந்து நான்குமுறை ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.