ஒக்கி, கஜாவுக்கு பிறகு ஃபனி புயல்; கடற்கரையோர மாவட்டங்கள் உஷார்?!..

 

ஒக்கி, கஜாவுக்கு பிறகு ஃபனி புயல்; கடற்கரையோர மாவட்டங்கள் உஷார்?!..

மனிதகுலம் இயற்கை சீற்றத்துக்கு எதிராக போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒக்கி புயல், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தும், இழப்பில் இருந்தும் மக்கள் மீளாத நிலையில், ஃபனி என்ற புதிய புயல் தமிழகத்தை தாக்கவுள்ளது.

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே நிகழ்ந்து வருகிறது. மனிதகுலம் இயற்கை சீற்றத்துக்கு எதிராக போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒக்கி புயல், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தும், இழப்பில் இருந்தும் மக்கள் மீளாத நிலையில், ஃபனி என்ற புதிய புயல் தமிழகத்தை தாக்கவுள்ளது.

storm

இன்று உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியிருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு ஃபனி (Cyclone Fani) என பெயரிடப்படுமாம்!. ஃபனி புயல் 30-ஆம் தேதி தமிழக பகுதியில் கரைகடக்க வாய்ப்புள்ளது! புயல் கரையை கடக்கும்போது 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். இதனால், பல இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

sss

புயல், மழை சூழலை சமாளிக்க கடற்கரையோர மக்கள் தயார் நிலையில் இருப்பது நல்லது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மக்களுக்கான பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைந்து செயல்படுவதன் மூலம் பேரிழப்பை தடுக்கலாம். கடந்தமுறை போல அஜாக்கிரதையாக இருந்தால், மக்கள் அவதிப்படுவதை தவிர்க்க முடியாது.

இதையும் வாசிக்க: எனக்கு நடந்தது வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது: பிரபல நடிகை பரபரப்பு புகார்!