ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டித்தரும் கேரள அரசு!

 

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டித்தரும் கேரள அரசு!

வடக்கு இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி உருவான ஒரு வெப்ப மண்டலச்  சூறாவளி பின்னர் ஓகி புயல் ஆகியது.

வடக்கு இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி உருவான ஒரு வெப்ப மண்டலச்  சூறாவளி பின்னர் ஓகி புயல் ஆகியது.

நிலப்பகுதிக்கு அருகில் உருவானதால் ஆரம்பத்தில் இது வலுவடையவில்லை. எனினும் அரபிக் கடலை அடைந்தபோது டிசம்பர் 1ம் தேதி இது வலுவடையத் தொடங்கியது. இலங்கையில் சேதம் ஏற்படுத்திய பிறகு இது இலட்சத்தீவுகள் மற்றும் இந்திய நிலப்பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. டிசம்பர் 29ம் தேதி நள்ளிரவு தொடங்கி 30ம் தேதி அதிகாலைக்குள் குமரி மாவட்டத்தை புரட்டிப்போட்டது. இதையடுத்து கேரளாவை தாக்கியது. இப்புயலுக்கு ‘ஓகி’ என்ற பெயர் வங்காளதேசத்தால் சூட்டப்பட்டது. 

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் தென் பகுதிகளில் குறைந்தபட்சம் 218 பேர் ஒகி புயலால்  உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அரபிக்கடலில் புயலில் சிக்கி கரை திரும்பாததால் அவர்களது குடும்பங்கள் நிற்கதியாகின.  மேலும் பல மீனவ கிராமங்கள் இருந்த அடையாளங்கள் கூட தெரியாமல் அழிந்தன. இரண்டு ஆண்டுகள் கடந்தாலும் ஒகி புயலின் வடு ஆறாமல் நிற்கிறது. 

ss

இந்நிலையில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டு, காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு கேரள அரசு வீடுகட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சுமார் 3 கோடியே 44 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்றைய அமைச்சரவையில் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நிலமில்லாத மீனவர்களும் வீடுகளை பெற்றுக்கொள்ளலாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது.