ஐ.பி.எல் போட்டிகளில் புதிய சாதனை படைத்தார் ஷிகர் தவான் !!

 

ஐ.பி.எல் போட்டிகளில் புதிய சாதனை படைத்தார் ஷிகர் தவான் !!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்தது. 

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் ஐ.பி.எல் போட்டிகளில் 500 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. 
இந்த தொடரின் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்தது. 

கிங்ஸ் xi பஞ்சாப்

இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேய்ஸ் ஐயர் அரைசதம் அடித்து கைகொடுத்ததன் மூலம் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 

நேற்றைய போட்டியில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் அரைசதம் அடித்த ஷிகர் தவான், இதன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் 500 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார். 
ஐ.பி.எல் போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியல்; 

டெல்லி டீம்

ஷிகர் தவான் – 502 பவுண்டரிகள்
கவுதம் கம்பீர் – 491 பவுண்டரிகள்
சுரேஷ் ரெய்னா – 473 பவுண்டரிகள்
விராட் கோஹ்லி – 471 பவுண்டரிகள்
டேவிட் வார்னர் – 445 பவுண்டரிகள்