ஐ.நா.வின் பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாடு: உலக நாடுகளின் மண்டையில் குட்டு வைத்த பிரதமர் மோடி

ஐ.நா.வின் பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாடு: உலக நாடுகளின் மண்டையில் குட்டு வைத்த பிரதமர் மோடி

ஐ.நா.வின் பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாட்டில், பருவநிலை மாற்ற நெருக்கடியை சமாளிக்க உலகம் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. உலக நடத்தை மாற வேண்டும் என பிரதமர் மோடி வெளிப்படையாக பேசி அதிர வைத்தார்.

ஐ.நா.வின் பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாட்டில், பருவநிலை மாற்ற நெருக்கடியை சமாளிக்க உலகம் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. உலக நடத்தை மாற வேண்டும் என பிரதமர் மோடி வெளிப்படையாக பேசி அதிர வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் பிரம்மாண்டமான ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனை முடித்து கொண்டு, ஐ.நா. பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியுயார்க் சென்றார்.

பருவநிலை உச்சிமாநாடு

நியுயார்க்கில் ஐ.நாவின் பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் கூறியதாவது: இது போன்ற கடுமையான சவால்களை நாம் சமாளிக்க வேண்டுமானால் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்புறம் இன்று நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இந்த பிரச்னை சமாளிக்க போதுமானதாக இல்லை. நமக்கு தேவை உலகளாவிய நடத்தை மாற்றம். 

பருவநிலை மாற்றம்

இந்தியா இன்று இங்கு இருப்பது இந்த தீவிரமான பிரச்னை குறித்து பேசுவதற்கு மட்டுமல்ல ஆனால் இது தொடர்பான செயல் திட்டத்தை அளிப்பதற்கும்தான். 2022ம் ஆண்டுக்குள் நாங்கள் எங்களது புதுப்பிக்கதக்க எரிசக்தி திறனை 175 ஜிகா வாட்டாக அதிகரிக்க உள்ளோம். மேலும் அதனை 475 ஜிகா வாட்டாக உயர்த்த உறுதி எடுத்துள்ளோம். பேசுவதற்கான நேரம் முடிந்து விட்டது. தற்போது உலகம் செயல்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.