ஐ.நா பொதுக்கூட்டம் நியூசிலாந்து பிரதமரிடம் மோடி பேச்சுவார்த்தை..!

 

ஐ.நா பொதுக்கூட்டம் நியூசிலாந்து பிரதமரிடம் மோடி பேச்சுவார்த்தை..!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் உறுப்பினர்களின் பொதுக் கூட்டத்தில் பல்வேறு தலைவர்களும் பங்கேற்று சிறப்புரை ஆற்றி வருகின்றனர்.

நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐநா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நியூசிலாந்து பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் உறுப்பினர்களின் பொதுக் கூட்டத்தில் பல்வேறு தலைவர்களும் பங்கேற்று சிறப்புரை ஆற்றி வருகின்றனர். இதில் கடந்த ஒரு வார காலமாக இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உறவுகளை பலப்படுத்தி வருகிறார்.

UN Meeting

அமெரிக்க அதிபரை சந்தித்த மோடி அணு ஆயுதங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதே பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தாவை சந்தித்து பேசிய மோடி இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீடு ஆகியன குறித்து பேசினார்.

மேலும் புல்வாமா தாக்குதலின்போது இந்தியாவிற்கு துணைநின்ற நியூசிலாந்து பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் குறித்து கேட்டறிந்தார். இரு நாடுகளுக்கும் இடையே மாணவர்கள் பாலமாக விளங்குவதாக மோடி தெரிவித்ததோடு, நியூசிலாந்தில் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகள் குறித்து பேசினார்.

UN Meeting

நியூசிலாந்தில் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு எளிதான முறையில் விசா கிடைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

ஐ.நா பொதுக் கூட்டம் முடிந்து பிறகு இதுகுறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன.